தூத்துக்குடியில் ஆக.25ல் போலீஸ் பணிக்கு எழுத்து தேர்வு 8 மையங்களில் நடக்கிறது

தூத்துக்குடி,ஆக.22: தூத்துக்குடியில் வரும் 25ம் தேதி போலீஸ், தீயணைப்பு, சிறைத்துறை காவலர்களுக்கான எழுத்து தேர்வு நடக்கிறது. 2019-ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த இரண்டாம் நிலைகாவலர், சிறைக்காவலர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கான எழுத்துதேர்வு தூத்துக்குடியில் 25ம் தேதி நடக்கிறது. இத்தேர்வுகள் தூத்துக்குடியில் பிஎம்சி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, காமராஜர் கல்லூரி, காரப்பேட்டை ஆண்கள் பள்ளி, புனித மேரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,  சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வ.உ.சி கல்லூரி வளாகம், புனித தாமஸ் மேல்நிலைப் பள்ளி, புனித மேரி மகளிர் கல்லூரி, ஆகிய 8 தேர்வு மையங்களில் நடக்கிறது. இத்தேர்வுகளை எழுத மொத்தம் 9599 விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு இந்த எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. அனைத்து விண்ணப்பதாரர்களும் எழுத்துத் தேர்வுக்கான அழைப்புக்கடிதம் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

 இணையதளத்திலிருந்து நுழைவுசீட்டு எடுத்த நகலில் புகைப்படம் இல்லாத விண்ணப்பதாரர் புகைப்படத்தை ஒட்டி புகைப்படத்தின் மீது அரசிதழ் பதிவுபெற்ற அலுவலரின் சான்றொப்பம் பெற்று தேர்வுக்கு வரும் போது கொண்டு வரவேண்டும்.

விண்ணப்பதாரர்கள் சரியாக காலை 9 மணிக்கு முன்பு தங்களுக்குரிய தேர்வு மையத்தில் ஆஜராக வேண்டும்.  எக்காரணத்தை கொண்டும் காலதாமதமாக வரும் விண்ணப்பதாரர்கள் தேர்வுமையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். விண்ணப்பதாரர்கள் தேர்வுமையத்திற்குள் செல்போன், கால்குலேட்டர் கொண்டுவர அனுமதியில்லை. விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு வரும்பொழுது அழைப்புக் கடிதம், நீலம் அல்லது கருப்பு நிற பந்துமுனை பேனா, தேர்வு அட்டை மற்றும் ஆள் அறியும் அடையாள அட்டை கொண்டு வரவேண்டும். மேலும் தேர்வு அழைப்பு கடிதத்தில் உள்ள அறிவுரைகளை படித்து பின்பற்ற வேண்டும். இத்தகவலை மாவட்ட  மாவட்ட எஸ்பி., அருண் பாலகோபாலன் தெரிவித்துள்ளார்.

Related Stories: