புனித ஜான்ஸ் பள்ளியில் இலவச கண் மருத்துவ முகாம்

பெ.நா.பாளையம், ஆக.14 :  பெரியநாயக்கன்பாளையம் அடுத்து உள்ள வீரபாண்டி பிரிவில் புனித ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இலவச கண், பல் மருத்துவ முகாம் நேற்று நடந்தது. முகாமை பள்ளியின் தாளாளர் அரவிந்தன் தொடங்கி வைத்தார்.

அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் ஸ்ரீ மினு பல் மருத்துவமனையும் இணைந்து நடத்திய முகாமில் மாணவ மாணவிகள் 900 பேருக்கு கண் மற்றும் பல் பரிசோதனை செய்யப்பட்டது. மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். பள்ளி வளாகத்திலுள்ள காய்கறி தோட்டத்தில் இயற்கை முறையில் விளைவித்த பொருட்களை பொதுமக்கள் பார்வையிட்டனர். வீடுகளில் மாடி தோட்டம் வளர்ப்பது குறித்து பெற்றோர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.

 இது குறித்து பள்ளியின் தாளாளர் அரவிந்தன் கூறுகையில், ‘ரசாயனம் இல்லாத இயற்கை காய்கறிகளை வீட்டுத் தோட்டம் மூலம் வளர்த்து குழந்தைகளுக்கு கொடுக்கும் போது உயிர்ச்சத்து குறைபாடின்றி வளருவார்கள். முகாமில் மாணவர்களுக்கு கண் பரிசோதனை மூலம் குறைகளை கண்டுபிடித்து  சரி செய்ய உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,’’ என்றார். பள்ளி முதல்வர் பாஸ்கரன், டாக்டர்  அருண்பிரசாத் , மருத்துவ குழுவினர் நிஷாந்தினி, அர்திரா, ரம்யா, ரோஷினி, மோனிஷா, ஜீவிதா, ஜூபின், ஆல்பின், பிஆர்ஓ சபீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: