நாசரேத்தை பசுமை நகரமாக மாற்றும் திட்டப்பணி தீவிரம்

நாசரேத், ஆக. 11: வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக நாசரேத் திகழ்கிறது. நாசரேத்தை பசுமை நகரமாக மாற்றுவதற்கான திட்டப்பணிகளில் பேரூராட்சி செயல் அலுவலர் தலைமையில்  பேரூராட்சி பணியாளர்கள் முழு  முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக கலெக்டர், பேரூராட்சிகளின் மண்டல உதவி இயக்குநர் வழிகாட்டுதலின்படி மரக்கன்றுகள்  நடும் திட்டப்பணியை மேற்கொண்டுள்ளனர். இதற்காக சுகாதாரபணியாளர்கள் மற்றும் சுய உதவி களப்பணியாளர்களைக்  கொண்டு சுகாதார மேற்பார்வையாளர் இல்லாத நிலையிலும் நெல்லி, புளி, வேம்பு,  மற்றும் நிழல் தரும் மரக்கன்றுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.  இதற்கு முன்னோடியாக புளி, வேம்பு, நாவல் மற்றும் மரக்கன்றுகள் அமைத்திட  நாற்றங்கால்பேரூராட்சி வளம் மீட்பு பூங்காவில் அமைத்து அதற்கென தனி நபர்களை  கொண்டு திறம்படசெயல் படுத்தப்பட்டு வருகிறது.

 நாசரேத் பேரூராட்சி அரசு  அலுவலகங்கள், கல்விநிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் தனியார் நிறுவன  கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு திட்டம் செயல்படுத்தி களப்பணியார்கள்  தீவிர கண்காணிப்பு செய்து வருகின்றனர். பேரூராட்சிக்கு சொந்தமான பேரூராட்சி  அலுவலகம்,பேரூந்து நிலையம்,வணிக வளாகங்கள், சந்தை கட்டிடம்,குடிநீர்  மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி, அருகிலும் பெரிய அளவில் மழைநீர் சேகரிப்பு  தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.  கடந்த ஆண்டில் நாசரேத் பேரூராட்சியில் பிரதான ஓடையான அழகம்மாள் ஓடையை சுத்தம் செய்தும், மரக்கன்றுகள் நட்டும்,  பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் சரி செய்து வருகிற செயல் அலுவலர்  மணிமொழிசெல்வன் ரங்கசாமி, கூடுதல் பொறுப்பாக உடன்குடி தேர்வு  நிலைபேரூராட்சியை கவனித்தாலும் இரு பேரூராட்சி வளர்ச்சிப்பணிகளையும் இரு கண்களாகப் பாவித்து செயல்பட்டு வருகிறார்.

பொதுமக்களிடம் குறைகளையும், தீர்த்து வைக்கின்றார்,  பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் தவிர்த்தல், டெங்கு ஒழிப்பு, மழைநீர் சேகரிப்பு,  பணிகளில் தனி கவனம் செலுத்தி வருகின்ற பேரூராட்சி நிர்வாகத்தின் முயற்சியை பொதுமக்கள் வரவேற்று பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Related Stories: