குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் அதிரடி கைது

கடலூர், ஜூலை 24: நெய்வேலி வடக்குத்து பகுதியை சேர்ந்த வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். நெய்வேலி மேல் வடக்குத்து பகுதியை சேர்ந்த சுரேஷ் (34) என்பவர் கடந்த மாதம் 19ம் தேதி  தனது நண்பருடன் நெய்வேலி ஆர்ச் கேட் பேருந்து நிலையம் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது காந்தி நகர் வடக்கு பகுதியை சேர்ந்த சவுந்தரபாண்டியன் (25) என்பவர் சுரேஷிடம் பணம் கேட்டு மிரட்டியதுடன் இல்லாமல் அவரது கழுத்தில் கத்தியை வைத்து ரூ.600 பணத்தை பறித்துச் சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிந்து சவுந்தரபாண்டியனை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் போலீஸ் விசாரணையில் சவுந்தரபாண்டியன் மீது நெய்வேலி டவுன்ஷிப் உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது குற்ற செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்ட எஸ்.பி. அபிநவ் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து சவுந்தரபாண்டியன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் மேலும் ஓராண்டு காவல் நீட்டிப்பு செய்து அடைக்கப்பட்டார்.

Related Stories: