காய்கறி சாகுபடியை அதிகரிக்க ரூ.20 லட்சம் ஒதுக்கீடு

கோவை, ஜூலை 18:   தமிழகத்தில் தோட்டக்கலைத்துறையில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி இயக்கம், தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் மானாவாரி அபிவிருத்தி திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கு ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. நடப்பாண்டு தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் காய்கறிகள் சாகுபடி பரப்பளவை அதிகரிக்க ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 100 எக்டர் வரை அதிகரிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இத்திட்டத்தில் ஒரு விவசாயிக்கு எக்டருக்கு ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக விவசாயி ஒருவருக்கு 1 ஹெக்டருக்கு மானியம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சின்னவெங்காயம் சாகுபடி பரப்பளவையுலம் 50 எக்டர் அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் உமாராணி கூறியதாவது: கோவையில் கிணத்துக்கடவு, அன்னூர், காரமடை, பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர், சுல்தான்பேட்ட உள்பட பகுதிகளில் காய்கறி சாகுபடி அதிகளவில் மேற்கொள்ளபட்டு வருகிறது. சராசரியாக ஆண்டுக்கு 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் எக்டர் பயிரிடப்படுகிறது. நடப்பு ஆண்டு மேலும் 100 எக்டர் வரை சாகுபடி பரப்பளவை அதிகாரிக்க ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுல்தான்பேட்டை, தொண்டாமுத்தூர் உள்பட பகுதிகளில் சின்னவெங்காயம் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் மேலும் சாகுபடி பரப்பளவை அதிகரிக்கும் விதமாக 50 ஹெக்டர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு மானியம் வழங்க ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வட்டார தோட்டக்கலைத் துறை அலுவலகங்களை நேரடியாக அணுகியும், தோட்டக்கலை உதவி அலுவலரிகளிடமும் விவசாயிகள் விண்ணப்பம் அளிக்கலாம் இவ்வாறு உமாராணி கூறினார்.

Related Stories: