ஆசனூர் சாலையில் யானைகளால் பரபரப்பு

சத்தியமங்கலம், ஜூலை 18:  சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு  வனவிலங்குகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழகம் - கர்நாடக மாநிலத்தை இணைக்கும் திண்டுக்கல் - பெங்களுரு தேசிய நெடுங்சாலை அமைந்துள்ளது. வனப்பகுதியில் உள்ள யானைகள் அவ்வப்போது தீவனம் மற்றும் குடிநீர் தேடி தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வது வழக்கம். நேற்று காலை 4 யானைகள் நீண்ட நேரம் ஆசனூர் மலைப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் தீவனம் சாப்பிட்டபடி நின்றிருந்தன. பின்னர் யானைகள் ஒவ்வொன்றாக தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்றன. அப்போது சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் யானைகள் சாலையை கடந்து வனப்பகுதிக்குள் செல்லும் வரை காத்திருந்து பின்னர் புறப்பட்டு சென்றனர்.

Advertising
Advertising

Related Stories: