தூத்துக்குடியில் ஜூலை 20ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி, ஜூலை 18: தூத்துக்குடி வ.உ.சி, கல்லூரியில்  நாளை மறுதினம் (20ம் தேதி) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதை இளைஞர்கள்  பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் சந்தீப்நந்தூரி  கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி  மாவட்ட நிர்வாகத்தின் மேற்பார்வையில மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும்,  மாவட்ட மகளிர் திட்ட அலுவலகமும் இணைந்து நடத்தும் தனியார் வேலைவாய்ப்பு  முகாம்  நாளை மறுதினம் (20ம் தேதி) காலை 9 மணிக்கு வஉசிதம்பரனார் கல்லூரியில் நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களைச்  சேர்ந்த முன்னணி தனியார் நிறுவனங்கள் முகாமிள் பங்கேற்று ஆள்களை தேர்வு  செய்ய உள்ளதால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்புக்காக பதிவு  செய்தவர்கள், பதிவு செய்யாதவர்கள் என மாவட்டத்தில் உள்ள அனைவரும் முகாமில்  பங்கேற்று பயன்பெற வேண்டும். இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories:

>