ஊரணியை தூர்வார வலியுறுத்தி எட்டயபுரம் தாலுகா முற்றுகை

எட்டயபுரம், ஜூலை 16: எட்டயபுரம் அருகே உள்ள நற்கலைக்கோட்டை கிராம ஊரணியை தூர்வாரக் கோரி தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி தாசில்தாரிடம் மனு அளித்தனர்.  எட்டயபுரம் அடுத்த நற்கலைக்கோட்டை கிராமத்தில் உள்ள ஊரணியை தூர்வார வலியுறுத்தியும், ஊரணிக்கு மேற்புறமுள்ள கால்வாய் வரத்து பகுதிகளை சுத்தம் செய்யக் கோரியும் கிராம மக்கள் எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதில் கிராம தலைவர் கருத்தப்பாண்டியன், செயலாளர் ராமசுப்பு, பொருளாளர் தங்கராஜ், ஆண்டிசாமி, சீனிவாசகம், விவசாயிகள் சங்க தூத்துக்குடி மாவட்ட செயலாளர் நல்லையா, விவசாயிகள் சங்க எட்டயபுரம் தாலுகா செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி தாசில்தார் வதனாளிடம் மனு அளித்தனர். அதனை பெற்றுக் கொண்ட தாசில்தார், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையேற்று பொதுமக்கள், முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Advertising
Advertising

Related Stories: