கோவில்பட்டியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்

கோவில்பட்டி, ஜூலை 16: கோவில்பட்டியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் 2042 பேருக்கு இலவச லேப்-டாப்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.  கோவில்பட்டி கம்மவார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச லேப்-டாப் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் கதிர்வேல், பள்ளிக்குழு உறுப்பினர் ஆழ்வார்சாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். 264 மாணவிகளுக்கு இலவச லேப்-டாப்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார். தலைமை ஆசிரியர் விக்னேஷ்வரி நன்றி கூறினார்.

Advertising
Advertising

 இதேபோல் கோவில்பட்டி வஉசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஏவி மேல்நிலைப்பள்ளி, லட்சுமிமில் மேல்நிலைப்பள்ளி, ஊத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, காமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள், மொத்தம் 2042 இலவச லேப்-டாப்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.  நிகழ்ச்சியில் சின்னப்பன் எம்எல்ஏ, ஆர்டிஓ விஜயா, தாசில்தார் பரமசிவன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள கிரி, மாணிக்கவாசகம், வஉசி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முனியசாமி, நகர அதிமுக செயலாளர் விஜயபாண்டியன்,  மாவட்ட துணை செயலாளர் தங்கமாரியம்மாள், எல்எஸ் பாபு, சவுந்திரராஜன், வெள்ளைத்துரை, துறையூர் கணேஷ்பாண்டியன், கூட்டுறவு சங்க தலைவர் ரத்தினராஜ், துணை தலைவர் செண்பகமூர்த்தி, ரமேஷ், ராமச்சந்திரன், ஆபிரகாம் அய்யாத்துரை, போடுசாமி, ராசையா, அருணாசலசாமி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: