பொள்ளாச்சியில் 6 வயது சிறுமி மர்ம சாவு

பொள்ளாச்சி, ஜூலை 12: பொள்ளாச்சி உடுமலைரோடு மரப்பேட்டையை சேர்ந்தவர் சின்ராஜ், கூலித்தொழிலாளி.  இவரது மனைவி செல்வி. இவர்களது மகள் மோனிஷா(6). அப்பகுதியில் உள்ள அரசு  பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று அதிகாலையில்  தூங்கிகொண்டிருந்த மோனிஷா, வாயில் நுரை தள்ளியபடி பேச்சுமூச்சு இல்லாமல்  கிடந்தாள். இதைபார்த்து அதிர்ச்சிடைந்த அவரது தாய்  செல்வி மற்றும்  அங்கு வந்த உறவினர்கள் சிலர், உடனடியாக மோனிஷாவை மீட்டு அரசு  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள்,  ஏற்கனவே சிறுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஆனாலும், வாயில் நுரை தள்ளி ரத்தம் கசிந்ததால் சந்தேகம் எழுப்பினர்.   இதையடுத்து, வை அரசு  மருத்துவமனையிலிருந்து டாக்டர் குழுவினர் வரவழைக்கப்பட்டு சிறுமியின் உடல்  பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து கிழக்கு போலீசார்  வழக்குப்பதித்து விசாரிக்கின்றனர். சிறுமியின் இறப்பில்  மர்மம் இருப்பதாக வந்த தகவலால், ஆர்டிஓ  விசாரணையும் நடைபெறுவதாக போலீசார்  தெரிவித்தனர்.

Advertising
Advertising

Related Stories: