திருப்பூரில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த ரூ.2.60 லட்சம் ரெடிமேட் ஆடைகள் திருட்டு: லாரி டிரைவர் கைது

தூத்துக்குடி, ஜூன்.26: திருப்பூரில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த 2 லாரிகளில் இருந்து ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள ரெடிமேட் ஆடைகளை திருடியதாக லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார். திருப்பூரைச்  சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் தங்கமணி(50). இவர் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து ஆடைகளை ஏற்றுமதி செய்வதற்காக ஒரு கன்டெய்னர் லாரியில் ரெடிமேட் ஆடைகளை  தூத்துக்குடிக்கு அனுப்பியுள்ளார்.  இந்த கன்டெய்னர் லாரியை தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்த ரமேஷ் மகன் ஈஸ்வரன்(25) என்பவர் ஓட்டி சென்றார். தூத்துக்குடி வந்தபோது  லாரியில் இருந்த பொருட்கள் சோதனை செய்யப்பட்டது. அப்போது சுமார் ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் மதிப்புள்ள ஆடைகள் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார்  திருட்டு வழக்குப்பதிவு செய்து டிரைவரை கைது செய்தனர்.

அதேபோல் திருப்பூர் காங்கேயம் ரோட்டை சேர்ந்தவர் தனசேகர் (45) என்பவர் தனியார் டிரான்ஸ்போர்ட் மூலம் ஒரு லாரியில், ஆடைகளை வெளிநாடுக்கு அனுப்ப தூத்துக்குடிக்கு அனுப்பி வைத்தார். தூத்துக்குடி வந்ததும் சோதனை செய்த போது லாரியில் இருந்த ஆடைகளில் சுமார் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள ஆடைகள் திருடப்பட்டது தெரியவந்தது.இதனையடுத்து தனசேகர் கொடுத்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் லாரியை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் உதயக்குமார், தனியார் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் ஜெயக்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: