கூட்டு குடிநீர் திட்டத்ைத நிறைவேற்றாததால் பாதிப்பு க.பரமத்தி கடைவீதியில் சமுதாய கூடம் அமைக்கப்படுமா?

க.பரமத்தி, ஜூன் 25: க.பரமத்தி ஒன்றியம் க.பரமத்தி கடைவீதியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்படும் வகையில் சமுதாய கூடம் அமைக்க ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்க.பரமத்தி ஒன்றியத்தின் பரமத்தி தலைமையிடமாக உள்ளது. இப்பகுதியில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் 40 சதவீதம் மக்கள் கூலி தொழிலாளியாக உள்ளனர். இவர்களின் வீட்டில் நடக்கும் காதணி விழா, திருமணம், பொது நிகழ்ச்சிகள் ஆகியவற்றை வெளியூர் பகுதிகளிலேயே நடத்தி வருகின்றனர். குறிப்பாக இங்கிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொடுமுடிக்கு செல்ல வேண்டியுள்ளது.கொடுமுடியில் சுப நிகழ்ச்சிகள் நடத்த மண்டபத்துக்கு பல ஆயிரம் ரூபாய் செலவு செய்வதுடன் உற்றார் உறவினர்கள் வருவதற்கு மிகவும் சிரமப்பட்டு செல்ல வேண்டியுயள்ளது இவ்வாறு மண்டபங்களில் சுப நிகழ்ச்சிகள் நடத்த முடியாத ஏழை மக்கள் அதிகமானோர் பல்வேறு கோவிலில் வைத்து சிக்கனமாக திருமணத்தை முடித்து கொள்கின்றனர். இருந்தாலும் வரவேற்பு வைக்க போதுமான இடவசதியோ, பொது இடங்களோ இருப்பதில்லை.

இவ்வாறு நிகழ்ச்சிகளை வெளியூரில் வைக்க நினைத்தாலும் சில நேரங்களில் நிகழ்ச்சிகளுக்கு திருமண மண்டபமோ, சமுதாயக்கூடமோ கிடைப்பதில்லை. இதனால் சிலர் திருமணம் மற்றும் காதணி விழா நடத்துவதற்கு முன்பு மண்டபம் உள்ளதா என தேடி அலைந்த பிறகே நிகழ்ச்சிகளை முடிவு செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி உள்ளனர்.எனவே பொதுமக்கள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் நலன்கருதி அனைத்து தரப்பு மக்கள் பயன்பெறும் வகையில் க.பரமத்தி கடைவீதியில் தற்போது ஒன்றிய நிர்வாகத்தின் மூலம் கடைகள் கட்டப்பட்டு வருகிறது. இதேபோல் இப்பகுதியில் சமுதாயக்கூடம் அமைக்க ஒன்றிய நிர்வாகமும், ஊராட்சி நிர்வாகமும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏழை எளிய மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: