குளத்துக்குடியிருப்பு யோவான் ஸ்நானன் ஆலய 97வது பிரதிஷ்டை பண்டிகை

நெல்லை, ஜூன் 21: நாசரேத் அருகே உள்ள குளத்துக்குடியிருப்பு பரிசுத்த யோவான் ஸ்நானன் ஆலயத்தில் 97வது பிரதிஷ்டை பண்டிகை மற்றும் ஆராதனை ஒழுங்குகள் நடந்து வருகிறது. 18ம் தேதி துவங்கிய விழாவில் உபவாச ஜெபம் நடந்தது. இயேசுவே மீட்பர் ஊழியங்கள் குரூஸ் மாசிலாமணி தேவசெய்தி அளித்தார். 19ம் தேதி இயேசு உங்களில் ஊழியங்கள் செல்லத்துரையின் நற்செய்தி கூட்டம் நடந்தது. நேற்று இரவு 7 மணிக்கு ஜெப பவனி, நேர்ச்சை பொருட்கள், காணிக்கை படைப்பு ஆராதனை நடைபெற்றது. இன்று அதிகாலை 4 மணிக்கு பரிசுத்த திருவிருந்து ஆராதனை, 5.30 மணிக்கு அசன காரிய ஆயத்த ஜெபம் நடந்தது. மாலை 4.30 மணிக்கு அசன விருந்து, இரவு 7 மணிக்கு ஸ்தோத்திர ஆராதனை, 7.30 மணிக்கு பாளை பார்வையற்றோர் பள்ளி சார்பில் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.

நாளை(22ம் தேதி) வேதாகமத் தேர்வு, வேத வினா குழு போட்டி நடைபெறுகிறது. இரவில் நடுவர் ஜான் சாமுவேல் தலைமையில் பட்டிமன்றம் நடக்கிறது. 23ம் தேதி பாடகர் ஞாயிறு, திருவிருந்து ஆராதனை, ஞானஸ்நான ஆராதனை, பண்டிகை ஆராதனை மற்றும் திருவிருந்து ஆராதனை நடைபெறுகிறது. வருகிற திங்கட்கிழமை நன்றி கூறும் ஜெபம், ஐக்கிய விருந்து நடக்கிறது. ஏற்பாடுகளை சேகர குரு ஆல்பர்ட் ஜெயசிங் தாமஸ், சபை ஊழியர் கிறிஸ்துதாஸ் மற்றும் ஊர் மக்கள் செய்துள்ளனர்.

Related Stories: