இடைப்பாடியில் நீதிமன்றம் அமைக்கும் பணியை நீதிபதி ஆய்வு

இடைப்பாடி, ஜூன் 14: இடைப்பாடியில் அமைக்கப்பட்டு வரும் நீதிமன்ற கட்டடத்தை மாவட்ட நீதிபதி நேற்று பார்வையிட்டார். இடைப்பாடியில் குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் அமைக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, இடைப்பாடி ஆவணியூர்கோட்டை சாலையில் வாழஅங்காளம்மன் கோயில் அருகில், வாடகை கட்டிடத்தில் நீதிமன்றம், நீதிபதிகள் தங்கும் அறை, வழக்கறிஞர்கள் தங்கும் அறை உள்ளிட்ட அனைத்து கட்டிட அமைப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு நேற்று பார்வையிட்டார். அவருடன் மாவட்ட குற்றவியல் நீதிபதி சிவஞானம், சங்ககிரி உரிமையியல் நீதிபதி பாக்கியம், சங்ககிரி குற்றவியல் நீதிபதி சுந்தர்ராஜ், உமாமகேஸ்வரி ஆகியோர் இறுதிகட்ட ஆய்வினை மேற்கொண்டனர். தொடர்ந்து, இடைப்பபாடி பகுதியில் வாடகை கட்டிடத்தில் நீதிமன்றம் அமைக்க அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும். இந்நிகழ்ச்சியில், வழக்கறிஞர்கள் ஆனந்தன், பன்னீர்செல்வம், வேலுசாமி, செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: