கிளி வளர்த்த 3பேருக்கு ₹15 ஆயிரம் அபராதம்

கெங்கவல்லி, ஏப்.24: ஆத்தூர் அருகே கீரிப்பட்டி பேரூராட்சியில் வீட்டில் கிளியை அடைத்து வளர்த்து வருவதாக ஆத்தூர் கோட்ட வன அலுவலர் ஆரோக்கியராஜ் சேவியருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், தம்மம்பட்டி வனச்சரகர் முருகேசன் தலைமையில், வனத்துறை குழுவினர் கீரிப்பட்டி பகுதியில் வசித்து வரும் தேவேந்திரன் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது வீட்டில் 3 கிளிகளை அடைத்து வளர்த்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து கிளிகளை வனத்துறையினர் மீட்டனர். பின்னர் வீட்டில் வனத்துறையினர் சோதனை செய்தபோது மான் கொம்பு ஒன்றை கைப்பற்றினர். வன உயிரின பொருட்களை அனுமதி இன்றி வைத்திருப்பது, வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972ன் படி தண்டனைக்குரிய குற்றம் என்பதால், தேவேந்திரன் அவரது மகன் கர்ணன், மாணிக்கவாசகம் உள்ளிட்ட 3பேர் மீது தலா ₹5000 வீதம் ₹15000 அபராதம் விதித்து வனத்துறையினர் எச்சரிக்கை செய்தனர்.

The post கிளி வளர்த்த 3பேருக்கு ₹15 ஆயிரம் அபராதம் appeared first on Dinakaran.

Related Stories: