கரிய காளியம்மன் கோயிலில் தீமிதி விழா

இடைப்பாடி, ஏப்.26: இடைப்பாடி அருகே கல்வடங்கம் காவிரிக்கரையில் உள்ள கரிய காளியம்மன், பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன் கோயில் திருவிழா, கடந்த 15 நாட்களுக்கு முன்பு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சிறப்பு அபிஷேகம், பூஜை, இரவில் சுவாமி திருவீதி உலா நடந்து வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி விழா நேற்று காலை நடந்தது. இதற்காக கோயில் முன் அமைக்கப்பட்ட குண்டத்தில் முதலில் பூசாரி தீ மிதித்தார். தொடர்ந்து பக்தர்கள் குண்டம் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினர். சிலர் கைக்குழந்தைகளை தூக்கிக்கொண்டும், அலகு குத்தியும் தீக்குண்டம் இறங்கினர். பின்னர் பொங்கல் வைத்தும், ஆடு, கோழிகள் பலியிட்டும் வழிபட்டனர். விழாவையொட்டி தேவூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று மாலை மாவிளக்கு, பழத்தட்டு ஊர்வலம் நடந்தது.

The post கரிய காளியம்மன் கோயிலில் தீமிதி விழா appeared first on Dinakaran.

Related Stories: