மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு

 

மேட்டூர், ஏப்.21: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், மழையில்லாததால் ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 200 கனஅடியாக நீடிக்கிறது.இதே போல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 10 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 20 கனஅடியாகி உள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கன அடிவீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வரத்தை காட்டிலும் திறப்பு அதிகமாக இருப்பதால், நேற்று முன்தினம் 55.41 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று 55.20 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 21.24 டிஎம்சியாக உள்ளது.

 

The post மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு appeared first on Dinakaran.

Related Stories: