வாகன ஓட்டிகள் கடும் அவதி மயிலாடுதுறை நகராட்சி குப்பை கிடங்கு ஒரு வாரமாக பற்றி எரிவதன் ரகசியம்

மயிலாடுதுறை, மே 30:  நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சியில் 1965ல் ஏற்படுத்தப்பட்ட குப்பைக் கிடங்கு ஆனந்ததாண்டவபுரம் சாலையில் இயங்கி வருகிறது. பல்லாயிரக்கணக்கான டன் குப்பை சேர்ந்துள்ளதால் துர்நாற்றமும், அதனால் ஏற்படும் சுகாதாரக்கேடும் அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வருகிறது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.9 கோடி செலவில் குப்பைகளை  தரம்பிரித்து அவற்றை அரைத்து உரம் தயாரிக்கும் பணிக்கான வேலை கடந்த 3 ஆண்டுகளாக நடந்து முடிவடையும் தருவாயில் உள்ளது. அந்த இடத்தை சுற்றி குப்பைகள் மலைபோல் குவிந்துவிட்டது. இந்த எந்திரத்தை இயக்குவதற்கு அந்த குப்பைகள் தடையாக இருந்ததால் அவற்றை சத்தமின்றி கொளுத்திவிட்டனர்.

நகராட்சியிடம் கேட்டால் நாங்கள் கொளுத்தவில்லை, யாரோ விஷமிகள் கொளுத்தி விட்டுவிட்டனர் என்று பதில் அளிக்கின்றனர். இன்னும் ஓரிரு தினங்களில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் குப்பைகளை அரைத்து உரமாக தயாரிக்கும் எந்திரம் தனது வேலையை துவங்க இருப்பதால் வேண்டுமென்றே இக்குப்பையை கொளுத்திவிட்டு விட்டனர் என்று அப்பகுதி குடியிருப்போர் குற்றஞ்சாட்டுகின்றனர். நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டதற்கு,  எரிந்த குப்பைகளை அணைத்து விட்டோம், உள்ளே கணன்றுகொண்டுள்ளது மட்டும்தான் இனிமேல் குப்பை எரிவதற்கான வாய்ப்பு இருக்காது வரும் குப்பைகளை அப்படியே அழிப்பதற்கான எந்திரம் வேலை துவங்க உள்ளது. இன்று அல்லது நாளை இப்பணி துவங்க இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.  நகராட்சி நிர்வாகம் இனிமேலாவது குப்பைகளை இதுபோல் கொளுத்துவதை ஊக்குவிக்க வேண்டாம் என்றும் தற்பொழுதும் வெளியேறும் புகையை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: