நாகப்பட்டினம் மாவட்டத்தில் காஜி பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

நாகப்பட்டினம்,ஜூன்28: நாகப்பட்டினம் மாவட்ட அரசு காஜி தேர்விற்கு வரும் 5ம் தேதிக்குள் விண்ணப்பி’ணக வேண்டும் என கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்ட அரசு காஜி தேர்வு செய்யப்படுவதற்கு காஜி சட்டம் 1880 (அரசாணை எண்.80 பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை நாள் (5.7.2002)-ன் படி நாகப்பட்டினம் மாவட்டத்தில், முஸ்லீம் மதத்தில், நன்கு அரபி தெரிந்த, ஆலிம்கள் அரபிக் பள்ளி ஆசிரியர்கள் மாவட்ட அரசு காஜி பதவிக்கு விண்ணப்பிக்கலாம். ஆலிம்கள் பயிற்சி பெற்ற சான்றிதழ்களோடு நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட பிறப்டுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வரும் 5ம் தேதிக்குள் நேரில் வந்து மனுவாக அளிக்க வேண்டும். கூடுதல் தகவல் பெற 04365 251562 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

The post நாகப்பட்டினம் மாவட்டத்தில் காஜி பதவிக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: