திருமணமான 2 ஆண்டில் பெண் தூக்கிட்டு தற்கொலை

மயிலாடுதுறை,ஜூன் 29: மயிலாடுதுறையை அடுத்த திருமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் வரதராஜன். இவரது மகள் தேன்மொழிக்கு 2022ம் ஆண்டு குத்தாலம் கீழப்பருத்திக்குடி ஊராட்சி நாகம்பாடி கிராமத்தை சேர்ந்த சாமிதுரை-மரகதம் ஆகியோரின் மகன் பாரதிராஜா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த 8 மாதங்களில் பாரதிராஜா வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று விட்டார். தேன்மொழி மாமியார் குடும்பத்தினருடன் தங்கி இருந்த நிலையில், கடந்த மே மாதம் 14ம் தேதி வீட்டின் அறையில் தூக்கு போட்டு இறந்து விட்டதாக மாமியார் மரகதம் வரதராஜனுக்கு போனில் தகவல் தெரிவித்துள்ளார். மகளின் மரணம் குறித்து மாமனார் சாமிதுரை, மாமியார் மரகதம், நாத்தனார் பிரியா மற்றும் நந்தினி மற்றும் கணவர் பாரதிராஜா ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக வரதராஜன் புகார் தெரிவித்ததார்.

இதுகுறித்து, மயிலாடுதுறை ஆர்டிஓ யுரேகா மற்றும் பாலையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கடந்த 16ம் தேதி தேன்மொழிக்கு சீர்வரிசையாக கொடுத்திருந்த 7 பவுன் நகை, புல்லட் மற்றும் சீர்வரிசை பொருள்களை திருப்பித் தருமாறு வரதராஜன் கேட்டுள்ளார். அதற்கு பாரதிராஜா குடும்பத்தினர் நாங்கள் ஐந்து ஊர் கிராம பஞ்சாயத்தார்கள் சேர்ந்து முடிவு செய்த பிறகு சொல்கிறோம் என்று கூறியதுடன், சிலர் தகாத வார்த்தைகளை கூறி வரதராஜன் தரப்பினரிடம் தகராறு செய்துள்ளனர். இதுகுறித்து வரதராஜன் பாலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், கடந்த 18ம் தேதி அவர்களை பாலையூர் காவல் நிலையத்துக்கு அழைத்த இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் சண்முகம் ஆகியோர் புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டால் சீர்வரிசை பொருட்களை திருப்பித் தருவதாக கூறியுள்ளனர்.

இதற்கு வரதராஜன் தரப்பினர் ஒத்துக் கொள்ளாததால் அனைவரும் தங்களை மிரட்டி அனுப்பியதாக மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்த வரதராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர், கலைச்செல்வியின் மரணம் கொலையா? தற்கொலையா என உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சீர்வரிசை பொருட்களை மீட்டுத்தரவும் வேண்டும் என மனு அளித்துள்ளனர்.

The post திருமணமான 2 ஆண்டில் பெண் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: