சாதாரண மழைக்கே சேறும் சகதியுமான பஸ் ஸ்டாண்ட் பயணிகள் அவதி

காளையார்கோவில், மே 25: காளையார்கோவில் பேருந்து நிலையத்தில் தற்போது பெய்த சிறு மழைக்கே பயணிகள் பயன்படுத்த முடியாத அளவிற்குச் சேறும் சகதியுமாக உள்ளதாகச் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றார்கள். காளையார்கோவில் ஒன்றியம் சிவகங்கை மாவட்டத்தில் அதிக கிராமங்களை கொண்ட பெரிய ஒன்றியமாக உள்ளது. இப்பகுதியில் தாலுகா அலுவலகம், அரசு மருத்துவமனை, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரி, வர்த்தக நிறுவனங்கள் போன்றவைக்கு நாள் தோறும் 2000க்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். பேருந்து நிலையத்தில் சில வருடங்களுக்கு முன்னால் போடப்பட்ட சிமிண்ட் சாலை முற்றிலும் பெயர்ந்து நடக்கூட முடியாத அளவிற்குப் பள்ளம் மேடுகளாக உள்ளது. சிறு மழைக்கே குளம்போல் மாறிவிடுகின்றது. மதுரை தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் காளையார்கோவில் பேருந்து நிலையம் அருகில் இதுபோன்ற பள்ளங்கள் அதிகம் உள்ளன. இதனால் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறிவிடுகின்றன. இதனால் பயணிகள் சிரமப்படுகின்றனர். எனவே உடனடியாக காளையார்கோவில் பேருந்து நிலையத்தை சுற்றிலும் மராமரத்து பணிகள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றார்கள்.

Related Stories: