திருப்புவனம் பேரூராட்சியில் தேர்தலில் 8 ஆயிரம் பேர் வாக்களிக்க வரவில்லை

திருப்புவனம், ஏப்.24: திருப்புவனம் பேரூராட்சி பகுதியில் மட்டும் 8 ஆயிரம் பேர் வாக்களிக்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19ம் தேதி நடந்தது. தமிழகம் முழுவதும் வாக்கு சதவீதம் தேர்தல் கமிஷனும் அரசியல் கட்சிகளும் எதிர்பார்த்த அளவில் இல்லை. திருப்புவனம் பேரூராட்சிப்பகுதியில் 21 வாக்குச்சாவடிகள் உள்ளன. ஆண், பெண் என மொத்த வாக்காளர்கள் 20 ஆயிரத்து 657 பேர் உள்ளனர். ஆனால் மொத்தம் 12 ஆயிரத்து 53 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.

சுமார் 8 ஆயிரத்து 604 பேர் வாக்களிக்க வரவில்லை. கடந்த தேர்தல்களில் பஸ் நிறுத்தம், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் வாக்களிப்பது எப்படி என்பது குறித்து வாக்குப்பதிவு இயந்திரத்தில் மாதிரி வாக்குப்பதிவை தேர்தல் கமிஷன் அரசு மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த தேர்தலில் அது போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த தேர்தல் கமிஷன் தவறி விட்டதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

The post திருப்புவனம் பேரூராட்சியில் தேர்தலில் 8 ஆயிரம் பேர் வாக்களிக்க வரவில்லை appeared first on Dinakaran.

Related Stories: