காரைக்குடி கே.எம்.சி மருத்துவமனையில் முதியவர் தொடையில் 8 கிலோ கேன்சர் கட்டி அகற்றம்

காரைக்குடி, ஏப். 26: காரைக்குடி கே.எம்.சி மருத்துவமனையில் 60 வயது முதியவருக்கு தொடையில் இருந்து 8 கிலோ எடை கொண்ட கேன்சர் கட்டி அகற்றப்பட்டுள்ளது என டாக்டர் காமாட்சி சந்திரன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், காரைக்குடி அருகே குருச்சிவயல் பகுதியை சேர்ந்த 60 வயது முதியவர் கடந்த 10 வருடங்களாக வலது தொடை வீக்கத்தின் காரணமாக கடும் அவதிப்பட்டு வந்தார்.

பல்வேறு மருத்துவமனைகளில் அவர் சிகிச்சை பெற்றும் உரிய பலன் இல்லாததால் கே.எம்.சி மருத்துமவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு வலது தொடையில் கேன்சர் கட்டி இருப்பது தெரியவந்தது. கடந்த 7 மாதத்திற்கு முன் வலது கழுத்தில் நரம்பில் உருவாக கூடிய கட்டியை அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக மருத்துவ குழுவினர் அகற்றினர்.

தற்போது 2வது முறையாக வலது தொடையில் கண்டறியப்பட்ட 8 கிலோ எடையும் 35 செ.மீ நீளம் கொண்ட கேன்சர் கட்டியை சிறப்பு பொது மற்றும் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை குழு மற்றும் மயக்க மருந்து நிபுணர் குழு இணைந்து அகற்றினர். அறுவை சிகிச்சைக்கு பிறகு அடுத்த நாள் முதியவர் நலமுடன் நடந்தார். இதுபோல் உள்ள அறுவை சிகிச்சையில் பெரும்பாலும் காலை அகற்ற வேண்டிய நிலை தான் ஏற்படும். ஆனால் அதனை தவிர்த்து கே.எம்.சி மருத்துவர்கள் திறமையாக செயல்பட்டு காலை அகற்றாமல் அறுவைசிகிச்சையின் மூலம் கட்டியை மட்டும் அகற்றி உள்ளனர், என்றார்.

The post காரைக்குடி கே.எம்.சி மருத்துவமனையில் முதியவர் தொடையில் 8 கிலோ கேன்சர் கட்டி அகற்றம் appeared first on Dinakaran.

Related Stories: