லாடனேந்தல் வீரமாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

சிவகங்கை, ஏப்.27: லாடனேந்தல் கிராமத்தில் வீரமாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம் லாடனேந்தல் கிராமத்தில் விநாயகர் கோயில், அய்யனார் கோயில், முனியாண்டி சுவாமி கோயில், ஊர்க்காவலன் சுவாமி கோயில், வீரமாகாளியம்மன் கோயில், முத்தையா சுவாமி கோயில், காமாட்சி அம்மன் கோயில் ஆகிய ஏழு கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை வேலம்மாள் கல்வி அறக்கட்டளை தலைவர், திருப்பணிக்குழு தலைவர் எம்.வீ.முத்துராமலிங்கம் மற்றும் லாடனேந்தல், பாப்பாங்குளம் கிராமமக்கள் செய்திருந்தனர்.

முன்னதாக அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், தன பூஜை, மகா கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், வாஸ்து சாந்தி, ரக்ஷாபந்தனம், கும்பஅலங்காரம், கலா ஆகாஷணம், காலயாக பூஜை, திரவ்யாஹீதி, பூர்ணாஹீதி, தீபாராதனை, மகா பூர்ணாஹீதியுடன் கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. கடந்த 3 நாட்களாக நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஆட்டம் கலாஸ்மிதி கேரளா குழுவினரின் செண்டை மேள கச்சேரி, சின்னத்திரை கலக்கப்போவது யாரு புகழ் மதுரை முத்து குழுவினரின் மாபெரும் நகைச்சுவை நட்சத்திர இசை சங்கமம், லஷ்மண் ஸ்ருதி இசையகம் குழுவினரின் இசை கச்சேரி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

The post லாடனேந்தல் வீரமாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா appeared first on Dinakaran.

Related Stories: