மக்களவை தேர்தலில் கனிமொழி வெற்றி திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

கோவில்பட்டி, மே 24: தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கனிமொழி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்ற பெற்றார். அவரது வெற்றியை கொண்டாடும் வகையில் கோவில்பட்டியில் வடக்கு மாவட்ட திமுக விவசாய அணி சார்பில் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. கோவில்பட்டி எட்டயபுரம் ரோட்டில் நடந்த விழாவிற்கு வடக்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ராமர் தலைமை வகித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. இதில் நகர அவைத்தலைவர் முனியசாமி, அண்ணாத்துரை, நாஞ்சில்குமார், இனாம்மணியாச்சி ஊராட்சி செயலாளர் முத்துராமன், மாவட்ட பிரதிநிதி பாலசுப்பிரமணியன், 11வது வட்டம் ஈகாவேலுச்சாமி, கந்தசாமி, உதயசூரியன், தெய்வேந்திரகணேசன், ஒன்றிய துணை செயலாளர் தங்கப்பாண்டியன், கருப்பசாமி, காமராஜ், பாலசுப்பிரமணியன், ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

திருச்செந்தூர்: இதேபோல் திருச்செந்தூர் வஉசி திடல் அருகே திமுகவினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இதில், மாவட்ட பிரதிநிதி முத்துக்குமார், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் பொன்முருகேசன், முன்னாள் கவுன்சிலர் கோமதிநாயகம், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பிரவீன், முன்னாள் நகர செயலாளர் ராஜ்மோகன், வார்டு செயலாளர் ஆனந்தன், மாசனம், துரை, ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சாத்தான்குளம்:  சாத்தான்குளம் ஒன்றிய திமுக சார்பில் சாத்தான்குளம் பழைய பஸ் நிலையத்தில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர். இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜோசப் தலைமை வகித்து இனிப்பு வழங்கினார். இதில் நகர செயலாளர் இளங்கோ, பொதுக்குழு உறுப்பினர் இந்திராகாசி, ஒன்றிய அவைத் தலைவர் சவுந்திரபாண்டியன், ஒன்றிய பொருளாளர் வேல்துரை, ஒன்றிய துணை செயலாளர் பாலமுருகன், நகர இளைஞரணி அமைப்பாளர் முருகன், மாவட்ட பிரதிநிதிகள் நயினார், அலெக்ஸ்புருட்டோ, சரவணன், முன்னாள் மாவட்ட  பிரதிநிதி கெங்கை ஆதித்தன், ஒன்றிய வக்கீல் பிரிவு  துணை அமைப்பாளர்கள் மணிமாறன் ரவிச்சந்திரன்,  ஒன்றிய கலை இலக்கிய பகுத்தறிவு பாசறை துணை செயலாளர்கள் வேம்பரசு, செல்வம், ஊராட்சி செயலாளர்கள் பனைவிளை ராஜபாண்டி, முதலூர் ராஜபாண்டி, கணபதிபாண்டி, ஜெயபால் , சித்திரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் சாத்தான்குளம் அருகே உள்ள போலையர்புரம் விலக்கில் ஒன்றிய துணை செயலாளர் பாலமுருகன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு  மற்றும் பிரியாணி வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன், துணை அமைப்பாளர் ஜெகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கயத்தாறு:  மக்களவை தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை தொடர்ந்து கயத்தாறில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளர் கேகேஆர் அய்யாதுரை தலைமையில் திமுகவினர் இனிப்பு வழங்கினர். மாவட்ட சிறுபான்மை துணை அமைப்பாளர் கே எம் ஏ பஷீர் முன்னிலை வகித்தார். கயத்தாறு கீழ பஜார் மெயின் ரோடு ரோடு, பேருந்து நிலையம் நிலையம் மற்றும் வடக்கு தெருவில் திமுகவினர் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். பின்னர் அங்கிருந்த பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர் மாவட்ட பிரதிநிதிகள் கொம்பையா எட்டுராஜா, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சங்கர், அகிலாண்டபுரம் ஊராட்சி செயலர் கருணாநிதி, ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் சுரேஷ். நகர இளைஞரணி துணை அமைப்பாளர் பூல்பாண்டி, காங்கிரஸ் தலைவர் பாடலிங்கம் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

ஆறுமுகநேரி:  ஆறுமுகநேரி மெயின் பஜாரில் நகர திமுக செயலாளர் கல்யாணசுந்தரம் தலைமையில் திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். தொடர்ந்து பட்டாசு வெடித்து கொண்டாடினர். நிகழ்ச்சியில் திமுக இளைஞரணி அமைப்பாளர் அகஸ்டின், கூட்டுளவு வங்கி தலைவர் ராகவன், திருச்செந்தூர் வட்டார காங்கிரஸ் தலைவர் சற்குரு, நகர காங்கிரஸ் தலைவர் ராஜாமணி, உட்பட திரளானோர் கலந்துக் கொண்டனர். காயல்பட்டினத்தில் புதிய பேரூந்து நிலையம் அருகில் காயல்பட்டினம் நகர திமுக அமைப்பாளர் முதுது முகம்மது தலைமையில் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

Related Stories: