சீயோன் ஆலய முப்பெரும் விழா

உடன்குடி, மே 24: உடன்குடி அருகே சீயோன்நகர் பரிசுத்த சீயோன் ஆலய 80வது பிரதிஷ்டை விழா, அசன பண்டிகை மற்றும் பல்வேறு புதிய கட்டிடங்கள் திறப்பு ஆகிய முப்பெரும் விழா நடந்தது. கடந்த 10ம் தேதி இரவு 7 மணிக்கு விபிஎஸ் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. விழா நாட்களில் உபவாச கூடுகை, ஜான்தாமஸ் சபை மன்ற தலைவர் கோல்டுவின் தலைமையில் திருவிருந்து ஆராதனை, ஆலய முன்மண்டபம் பிரதிஷ்டை,  புதுப்பிக்கப்பட்ட தொடக்கப்பள்ளி கட்டிட பிரதிஷ்டை, புதிய நிலம் ஆலயத்திற்கு அர்ப்பணித்தல், பிரதிஷ்டை பண்டிகை சிறப்பு ஆராதனை, நேர்ச்சை காணிக்கை படைத்தல், திடப்படுத்துதல் ஆராதனை, ஞானஸ்தான மற்றும் அசனப்பண்டிகை ஆயத்த ஆராதனை வள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பேராயர் தேவசகாயம், பெங்களூரு போதகர் ராஜசிங் ஞானராஜ் ஆகியோர் தேவசெய்தி வழங்கினர். கிறிஸ்தியான் கோலப் அணி சார்பில் வேதாகமத்தில் ஜெபத்தில் வல்லவர்கள் ஆண்களா, பெண்களா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. கிறிஸ்தியாநகரம் உதவி சேகரகுரு ஜான்சாமுவேல் நடுவராக செயல்பட்டார். ஏற்பாடுகளை சீயோன்நகர் சேகரத் தலைவர் தனசீலன், சபை ஊழியர் ஆனந்தமணி மற்றும் சபை மக்கள் செய்திருந்தனர்.

Related Stories: