விளாத்திகுளம், ஓட்டப்பிடாரத்தில் திமுகவுக்கு தபால் வாக்குகள் அதிகம்

தூத்துக்குடி, மே 24:  விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தல்களில் தபால் வாக்குகளில் திமுகவே முன்னிலை வகித்தது. விளாத்திகுளம் சட்டமன்ற இடைத்தேர்தலில் மொத்தம் 987 தபால் வாக்குகளில் பதிவாகி இருந்தன. இதில் திமுக வேட்பாளர் வசந்தம் ஜெயக்குமாருக்கு 543 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் சின்னப்பனுக்கு 137 வாக்குகளும் பதிவாகி இருந்தன. இவர்களுக்கு அடுத்தபடியாக சுயேச்சையாக போட்டியிட்ட மார்க்கண்டேயனுக்கு 125 வாக்குகள் கிடைத்திருந்தன. இதில் நோட்டாவுக்கு 23 பேர் வாக்களித்துள்ளனர். இதேபோல் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் மொத்தம் 653 தபால் வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில் திமுக வேட்பாளர் சண்முகையாவுக்கு 240 தபால் வாக்குகளும், அதிமுக வேட்பாளர் மோகனுக்கு 209 தபால் வாக்குகளும் பதிவாகி இருந்தன. இவர்களுக்கு அடுத்தபடியாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அகல்யாவுக்கு 82 தபால் வாக்குகளும், அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜிக்கு 68 தபால் வாக்குகளும் கிடைத்திருந்தன. இதே போல் நோட்டாவுக்கு 33 பேர் தபால் வாக்கு அளித்துள்ளனர்.

Related Stories: