குற்ற சம்பவங்களை தடுக்க அரியலூர் நகர் பகுதி முழுவதும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்

அரியலூர், மே 14:  அரியலூர் நகர் மற்றும் புறநகர் பகுதியில் நடக்கும் குற்ற சம்பவங்களை தடுக்க அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூர் நகரின் பல்வேறு இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை கருதி போலீசார் பாதுகாப்பு அளித்து வருகி–்ன்றனர். இவைகள் போதுமானதாக இல்லை. பெருகி வரும் சமூக குற்றங்களை தடுக்கும் வகையில் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சமூக விரோத செயல்கள், செயின் பறிப்பு போன்ற சம்பவங்கள் நடந்தேறி வருகிறது.

தனி மனிதனின் உயிர் பாதுகாப்பு, உடமை பாதுகாப்பு இல்லாமல் உள்ளது.

இதனால் பொதுமக்களும், பெண்களும் உரிய பாதுகாப்பின்றி அச்ச உணர்வோடு வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பு நலன் கருதி அனைத்து பகுதிகளிலும சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: அரியலூர் நகர் பகுதியில் பல இடங்களில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. போலீசில் புகார் அளித்தவுடன் திருடர்களை தேடுகின்றனர். ஆனால் யார் திருடியது என்று யாருக்கு தெரிவதில்லை.

சிசிடிவி கேமரா இருந்தால் குற்றம் நடந்தவுடன் இதில் யார் சம்மந்தப்பட்டடு இருக்கிறார்கள் என்று தெரிந்துவிடும். போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து உரியவர்களை கைது செய்து சிறையில் அடைக்காலம். இதபோல் தொடர்ந்து நடைபெறும்போது திருட்டு சம்பம் குறையும். சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டால் கண்டிப்பாக திருட்டு உள்ளிட்ட குற்ற செயல்கள் குறையும். இதனால் அரியலூர் நகர் பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்றனர்.

Related Stories: