பெரம்பலூர் நகராட்சியில் முதல் அரையாண்டு சொத்துவரி ஏப்.30ம் தேதிக்குள் செலுத்தினால் 5 % ஊக்கத்தொகை

பெரம்பலூர்,ஏப்.27: பெரம்பலூர் நகராட்சியில் 2024 -2025ஆம் நிதியாண்டில் செலுத்த வேண்டிய முதல் அரையாண்டு சொத்து வரினை- ஏப்ரல் 30ம் தேதிக்குள் செலுத்துபவர் களுக்கு 5 சதவீத ஊக்கத் தொகை பெற்று பயனடையலாம் என நகராட்சி ஆணையர் ராமர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நகராட்சிஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதி 2023-ன் 268 (1)ல் ஒவ்வொரு சொத்து வரி செலுத்தும் வரி விதிப்பு தாரர்கள், நிதியாண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்து வரியினை ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் எனவும், இரண்டாம் அரையாண்டுக் கான சொத்து வரியினை அக்டோபர் 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு ள்ளது.

மேலும் தமிழ்நாடு நகர்ப் புற உள்ளாட்சி அமைப்புகள் விதி 2023-ன் 268(2)-ல் மேற்கண்ட விவ ரப்படிக்கான காலக்கெடு வுக்குள் வரி செலுத்துபவ ருக்கு, சொத்துவரி கேட்பில் 5 சதவீதம் ஊக்கத்தொகை அளிக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட பொது மக்கள் தாங்கள் 2024-2025ம் நிதியாண்டில் செலுத்த வேண்டிய சொத்து வரி தொகையின் முதல் அரையாண்டிற்கான தொகையினை, ஏப்ரல் 30ம் தேதிக்குள்ளும், இரண்டாம் அரையாண்டு க்கான தொகையினை, அக்டோபர் 31ம் தேதிக் குள்ளும் செலுத்தி, சொத்து வரி கேட்பில் 5 சதவீதம் ஊக்கத்தொகை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் வசதிக்காக சனிக்கிழமை மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களிலும் கணினி வரி வசூல்மையம் செயல்படும். சொத்து வரி தொகையினை < https://tnurbanepay.tn.gov.in/ > என்ற இணையதளத்திலும் செலுத்தலாம் என ஆணையர் அதில் தெரிவித்துள்ளார்.

The post பெரம்பலூர் நகராட்சியில் முதல் அரையாண்டு சொத்துவரி ஏப்.30ம் தேதிக்குள் செலுத்தினால் 5 % ஊக்கத்தொகை appeared first on Dinakaran.

Related Stories: