97 பேர் பங்கேற்பு பெரம்பலூர் அருகே தனியார் டயர் தொழிற்சாலை தொழிலாளர்கள் 4வது நாளாக ஸ்டிரைக்

 

பாடாலூர், ஏப். 21: பெரம்பலூர் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விஜயகோபாலபுரத்தில் தனியாருக்கு சொந்தமான டயர் உற்பத்தி தொழிற்சாலை அமைந்துள்ளது. இதில் நிரந்தர, ஒப்பந்த, தொழில் பழகுநர் என பல்வேறு பிரிவாக ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இத்தொழிற்சாலையின் நிரந்தர ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் அறிவித்தனர். நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதையடுத்து தொழிற்சாலை தொழிலாளர் வெல்பேர் யூனியன் தலைவர் சதீஸ்குமார் தலைமையில் கடந்த 16 ம் தேதி இரவு முதல் தொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பு செய்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டம் நேற்றும் நீடித்தது. நேற்று காலை முதல் தொழிற்சாலை மெயின் கேட் முன்பு 200 க்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்றும் போராட்டம் நடக்க உள்ளது.

The post 97 பேர் பங்கேற்பு பெரம்பலூர் அருகே தனியார் டயர் தொழிற்சாலை தொழிலாளர்கள் 4வது நாளாக ஸ்டிரைக் appeared first on Dinakaran.

Related Stories: