உலக புத்தக தினத்தையொட்டி பெரம்பலூர் நூலகத்தில் புத்தகம் வாசிப்பு

 

பெரம்பலூர்,ஏப்.24: ஆண்டுதோறும் ஏப்ரல் 23ம் தேதி உலக புத்தக தினம், உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம் அல்லது புத்தகத்தின் சர்வ தேசதினம் என்றும் அழைக் கப்படுகிறது. இது ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவால் ஆண்டு தோறும் வாசிப்பு, வெளி யீடு மற்றும் பதிப்புரிமை ஆகியவற்றை ஊக்குவிக் கும் ஒரு நிகழ்வாக நடந்து வருகிறது. முதல் உலக புத்தக தினம், 1995ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி கொண்டாடப்பட்டது.

அன்றையதினம் தொடர்ந்து ஆண்டுதோறும் இதே நாளில் உலக புத்தக தின மாக அங்கீகரிக்கப்பட்டு வருகிறது. பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்டுக்கு தெற்கே உள்ள மாவட்ட மைய நூலகத்தில் நேற்று(23ம் தேதி) உலக புத்தக தினத்தையொட்டி நூலக உறுப்பினர்களான இளைஞர்கள், இளம் பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்களுக்கு விரும்பிய புத்தகங்களை, தேடி வந்த புத்தகங்களை தேர்ந்தெடுத்துவாசித்தனர்.

பெரம்பலூர் மாவட்ட நூலகர்(பொ) சந்திரசேகர், தலைமையில் கண்காணிப் பாளர் மணிமேகலை, மாவட்ட மைய நூலகர் சரஸ்வதி,இரண்டாம் நிலை நூலகர் ராதை, நூலகர்கள் மகாலட்சுமி, சுரேஷ்குமார், பவித்ரன், விஜயலட்சுமி மற்றும் வாசகர் வட்ட நிர்வா கிகள் இதற்கான ஏற்பாடு களைச் செய்திருந்தனர். இதே போல் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்ப்புற நூலகங்க ளிலும், கல்லூரி நூலகங்களிலும் உலக புத்தக தினத்தையொட்டி மாணவர்கள் இளைஞர்கள் இளம்பெண் கள், வாசகர்கள் உள்ளிட் டோர் நூல்களை எடுத்துப் படித்தனர்.

The post உலக புத்தக தினத்தையொட்டி பெரம்பலூர் நூலகத்தில் புத்தகம் வாசிப்பு appeared first on Dinakaran.

Related Stories: