கந்தர்வகோட்டை பகுதியில் தண்ணீர் பந்தல் திறக்க கோரிக்கை

கந்தர்வகோட்டை, மே 8: கந்தர்வகோட்டை பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அரசியல் கட்சியினர் தண்ணீர் பந்தல் அமைத்து தர கோரிக்கை எழுந்துள்ளது.

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தற்போது தாக்க தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிபட்டு வருகின்றனர். அவர்களுக்கு பயனளிக்கும் விதமாக அரசியல் கட்சியினர் முக்கிய இடங்களில் தண்ணீர் பந்தல் அமைத்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர். கடந்த வருடம் சில அரசியல் கட்சியினர் தண்ணீர் பந்தல்களை அமைத்திருந்தனர். எனவே இந்த வருடமும் தண்ணீர் பந்தல் அமைத்து தர கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Related Stories: