தொடர் விடுமுறையால் டாப்சிலிப்புக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

பொள்ளாச்சி, ஏப். 22:    பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட டாப்சிலிப்பிற்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்கு தங்கி,  வனத்தின் அழகு மற்றும் வன விலங்குகளையும் கண்டு ரசித்து செல்கின்றனர்.  இந்நிலையில், கடந்த 48 நாட்கள் நடந்த யானைகள் புத்துணர்வு முகாம் நிறைவடைந்ததையடுத்து, கடந்த 12ம் தேதி முதல்  மீண்டும் டாப்சிலிப்பில்,  ,சுற்றுலா பயணிகள் யானை சவாரி செய்தனர்.

 இதற்கிடையே கடந்த 17ம் தேதி முதல் நேற்று வரை தொடர் விடுமுறையாலும். பள்ளி தேர்வு நிறைவடைந்து கோடை விடுமுறையாலும், வெகுநாட்களுக்கு பிறகு, கடந்த 5நாட்களும் டாப்சிலிப்புக்கு சுற்றுலா பயணிகள் வருகை வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. மேலும், சுற்றுலா பயணிகள் சவாரி செய்ய, கோழிக்கமுத்தியிலிருந்து இரண்டு கும்கி யானைகள் சுழற்சி முறையில் பயன்படுத்தப்பட்டது.  கடந்த 5 நாட்களில் மட்டும் சுமார் 3ஆயிரம் சுற்றுலா பயணிகள் டாப்சிலிப் வந்துள்ளனர்  என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

Related Stories: