உடன்குடி அருகே காட்டுப்பகுதியில் கிடந்த எலும்பு கூடால் பரபரப்பு

உடன்குடி,ஏப்.21: உடன்குடி அருகே காட்டுப்பகுதியில் கிடந்த எலும்பு கூடால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரில் விசாரணையில் அது பள்ளி, கல்லூரிகளில் பயன்படுத்தப்படும் பைபரால் ஆன மனித எலும்பு கூடு என்பது தெரியவந்தது. டன்குடி அருகே ராமசாமிபுரம் பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள், வேலி ஓரம் எலும்பு கூடு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மிகவும் பழமையான இந்த எலும்பு கூடு சுமார் 15 வயதிலிருந்து 20 வயதிற்குள் இருக்கும். தலைப்பகுதியில் ஆணி அடிக்கப்பட்ட நிலையில் இருந்தது. திடீரென்று வந்த எலும்பு கூடால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்ததும் அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். ஒருவேளை மந்திரவாதிகளின் செயலா இது அல்லது மருத்துவ பயன்பாட்டிற்கு லேப்பில் பயன்படுத்தி விட்டு இங்கே கொண்டு வந்து போட்டார்களா? அல்லது தலையில் ஆணி அடித்து கொலை செய்யப்பட்டதா? என்று ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. எலும்பு கூடு ஆணா, பெண்ணா என்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து தட்டார்மடம், மெஞ்ஞானபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பள்ளி, கல்லூரிகளில் பயன்படுத்தப்படும் பைபரால் ஆன மனித எலும்புக்கூடு என்பது தெரியவந்தது. இதையடுத்து எலும்புக்கூடு சர்ச்சை ஓய்வுக்கு வந்தது. இந்த எலும்புக்கூடால் உடன்குடி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Related Stories: