அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா கோலாகலம்

அருப்புக்கோட்டை, ஏப். 10: அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை பொது அபிவிருத்தி டிரஸ்ட்டுக்கு பாத்தியமான முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அப்போது பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். மேலும், தினந்தோறும் கோயில் கொடிமரத்திற்கு தண்ணீர் ஊற்றி பக்தர்கள் வழிபட்டு வந்தனர். 15 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் நாள்தோறும் மண்டகப்படிதாரர்களால் அம்மன் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு காட்சியளிப்பார். 8ம் நாள் திருவிழாவாக நேற்று அம்மனுக்கு ஏராளமானோர் பொங்கல் வைத்து வழிபட்டனர். 9ம் நாள் திருவிழாவாக இன்று அக்கினிசட்டி மற்றும் பிராத்தனை பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. தினந்தோறும் கோவில் மண்டபத்தில் கலைநிகழ்ச்சிகள்  நடைபெறுகின்றன.

பொங்கல் விழாவை முன்னிட்டு பொருட்காட்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நாடார் உறவின்முறை பொது அபிவிருத்தி டிரஸ்ட் தலைவர் சுதாகர் தலைமையில், உறவின்முறை செயலாளர் ராஜமாணிக்கம், அமுதலிங்கேஸ்வரர் தேவஸ்தான டிரஸ்டி கணேசன், உறவின்முறை உதவி தலைவர் சுரேஷ்குமார், உறவின்முறை அம்பலகாரர் பிரேம்குமார், எஸ்பிகே ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயலாளர் காசிமுருகன், எஸ்பிகே பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயலாளர் கனகராஜ், எஸ்பிகே துவக்கப்பள்ளி மற்றும் கேஎஸ்எஸ் தியாகராஜன் மெமோரியல் மெட்ரிக்குலேசன் பள்ளிச் செயலாளர் சரவணன், எஸ்பிகே இண்டர்நேஷனல் பள்ளி செயலாளர் ராஜேஸ்குமார், கேஎஸ்எஸ் தியாகராஜன் நினைவு மருத்துவமனை மற்றும் தையல் பயிற்சி பள்ளி செயலாளர் பிரசாத், பொருட்காட்சி உதவி தலைவர் ராஜமாணிக்கம் மற்றும் உற்சவ கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

Related Stories: