கொலை வழக்கில் சாட்சி கூறியவருக்கு மிரட்டல்

சிவகாசி, டிச. 31: சிவகாசி அருகே புதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் கனி (41). டிரைவராக வேலை செய்து வருகிறார். கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற வீரமணி என்பவரின் கொலை வழக்கில் சாட்சி கூற கட ந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டுக்கு உறவினர்கள் பாண்டியம்மாள், நாகஜோதி, பாண்டி ஆகியோருடன் சென்றுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் புதுக்கோட்டையில் நின்று கொண்டிருந்த போது கனியிடம் வந்து தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரில் எம்.புதுப்பட்டி போலீசார் கல்லூரி மாணவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: