சிவகாசி, டிச. 31: சிவகாசி அருகே திருத்தங்கல் ஏ.ஜே. நகரை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (46). சிவகாசியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் போர்மேனாக வேலை செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று தனது டூவீலரில் திருத்தங்கல் ரோட்டில் குறுக்கு பாதை பஸ் நிறுத்தம் அருகில் சென்ற போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத டூவீலர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஆனந்தராஜ் சிகிச்சைக்ககா சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.
