ராஜபாளையத்தில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி: எம்எல்ஏ பங்கேற்பு

ராஜபாளையம், டிச. 31: ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலங்காபேரி ஊராட்சியில் உள்ள 22, 23 ஆகிய வாக்குச்சாவடிகளில் திமுக சார்பில் ‘தமிழ்நாடு தலை குனியாது, என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ என்ற தலைப்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தங்கபாண்டியன் எம்எல்ஏ தலைமை வகித்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் ஒன்றிய சேர்மன் மல்லி ஆறுமுகம் துவக்கி வைத்தார்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் 5 ஆண்டுகால சாதனை திட்டங்களில் வீடுதோறும் சென்று பொதுமக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில் அவை தலைவர் காளிதாஸ், மாவட்ட பிரதிநிதி அய்யகோன், கிளை செயலாளர்கள் மீனா ரவிக்குமார், கிருஷ்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

Related Stories: