அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக மீனவர் பிரதிநிதிகளிடம் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வாக்கு சேகரிப்பு

கொள்ளிடம், ஏப்.9: மயிலாடுதுறை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ஆசைமணிக்கு ஆதரவாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே கடலோர பழையாறு மீனவ கிராமத்திற்கு துணி நூல் மற்றும் கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் நேற்று நேரில் சென்றார். அங்குள்ள கிராமத் தலைவர்கள் மற்றும் கிராம முக்கியஸ்தர்களை அழைத்து மக்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஆசைமணிக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூட்டத்தில் பேசியதாவது:

மீனவர்களின் நலனுக்காக அதிமுக அரசு தொண்டாற்றி வருகிறது. பல நலத்திட்டங்களை செய்து வருகிறது. மீன்பிடி தடைக்காலத்திற்கான நிவாரணத்தை உயர்த்தி வழங்கியிருக்கிறது. எனவே இந்த திட்டங்கள் தொடர மயிலாடுதுறை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளார் ஆசைமணியை ஆதரித்து இரட்டை இலை சின்னத்தில் அனைவரும் வாக்களியுங்கள்.  மீனவர்களின் அனைத்து அடிப்படை வசதிகளை  நிறைவேற்றித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். சீர்காழி எம்எல்ஏ பாரதி, கொள்ளிடம் ஒன்றிய அதிமுக செயலாளர் நற்குணன் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: