தேர்தல் விதிமுறை மீறிய அதிமுக, அமமுகவை சேர்ந்த 2 பேர் மீது வழக்குப்பதிவு

தஞ்சை, ஏப் 3: தஞ்சையில் தேர்தல் விதிமுறைகள் மீறிய அதிமுக, அமமுகவை சேர்ந்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தஞ்சை  வடக்குவாசல் பகுதியில் அமமுக சார்பில் உரிய அனுமதி பெறாமல் தேர்தல்  விதிமுறைகளை மீறி அலுவலகம் திறந்து இருப்பதாக மேற்கு போலீசாருக்கு தகவல்  வந்தது.இதையடுத்து மேற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உரிய அனுமதி  பெறாமல் தேர்தல் அலுவலகம் திறந்த சீனிவாசன் (40) என்பவர் மீது  வழக்குப்பதிவு செய்தனர். வல்லம் பகுதியில் அனுமதி பெறாமல் அதிமுக சார்பில்  பேனர் வைத்திருப்பதாக வல்லம் போலீசாருக்கு தகவல் வந்தது.இதையடுத்து சம்பவ  இடத்துக்கு வல்லம் போலீசார் சென்று அனுமதி பெறாமல் பேனர் வைத்த  சென்னம்பட்டியை சேர்ந்த ராஜ்குமார் (34) மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Related Stories: