தாமதமாக தபால் கொண்டு சென்ற கூரியர் நிறுவனத்திற்கு அபராதம் கரூர் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு

கரூர், மார்ச் 29: கூரியர் மூலம் அனுப்பப்பட்ட தபால் கால தாமதமாக கொண்டு சேர்க்கப்பட்டதால் கூரியர் நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் கரூர் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் விதிக்கப்பட்டுள்ளது. கரூரைச் சேர்ந்தவர் தமிழ் ராஜேந்திரன். வழக்கறிஞர். இவர் தனியார் கூரியர் நிறுவனம் ஒன்றின் மூலம் கரூரில் இருந்து மதுரைக்கு கடிதம் அனுப்பியுள்ளார். ஆனால் அந்த கடிதம், கால தாமதமாக குறிப்பிட்ட முகவரியில் ர்க்கப்பட்டுள்ளது.இதனால், மன உளைச்சலுக்கு ஆளான அவர் தபாலை காலதாமதமாக சேர்த்த கூரியர் நிறுவனம் ரூ. 1 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரி கரூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு அளித்தார். மனுவினை விசாரித்த ஒய்வு பெற்ற நீதிபதி மற்றும் உறுப்பினர்கள், மனுதாரருக்கு, இழப்பு தொகை ரூ.10 ஆயிரம், வழக்கு செலவு ரூ. 3 ஆயிரம் ஆகியவற்றை 60 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் இழப்பீடு தொகை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால், செலுத்தப்படும் காலம் வரை 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

Related Stories: