மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா

ராஜபாளையம், மார்ச் 26: ராஜபாளையம் அருகே, சேத்தூர் மேட்டுப்பட்டி மாரியம்மன் கோயிலில், நேற்று முன்தினம் பூக்குழி இறங்கும் விழா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். ராஜபாளையம் அருகே, சேத்தூர் மேட்டுப்பட்டி மாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினசரி அம்மனுக்கு பல வகையான அபிேஷகம், அலங்காரம் நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வலம் வந்து வீதிஉலா நடைபெற்றது. விழாவின் ஏழாம் நாள் பூப்பல்லக்கில் அம்மன் எழுந்தருளி அருள்பாலித்தார். நேற்று முன்தினம் மாலை பூக்குழி இறங்கும் விழா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். பின்னர் பக்தர்கள் ஆயிரம் கண்பானை முளைப்பாரி எடுத்து வந்தனர். விழாவை காண சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமாக குவிந்தனர். ராஜபாளையம் டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Related Stories: