நெல்லிக்கொல்லை சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

சேத்தியாத்தோப்பு, மார்ச் 22: சேத்தியாத்தோப்பு அருகே நெல்லிக்கொல்லை சாலையை துரிஞ்சிக் கொல்லை, மதுவானை மேடு, பெரிய நெல்லிக்கொல்லை ஆகிய கிராமத்தில் வசிக்கும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், விவசாயிகள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை பயன்படுத்த முடியாத அளவுக்கு குண்டும் குழியுமாக இருப்பதால் அனைத்து தரப்பினரும் அவதிப்பட்டு வந்தனர். இதனை சுட்டி காட்டி தினகரன் நாளிதழில் செய்திவெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து 3 மாதத்திற்கு முன் டெண்டர் விடப்பட்டு ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கருங்கல் ஜல்லிகள் கொட்டி செம்மண் போட்டு சமன் செய்தனர். அதன் பின்னர் எவ்வித பணியும் நடக்கவில்லை. தற்போது ஜல்லிகள் பெயர்ந்து செம்மண் புழுதி பறந்து போக்குவரத்துக்கு லாயக்கற்று உள்ளது. மூன்று கிராமத்திற்கும் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் ஆகியவை செல்வதற்கு கால தாமதம் ஏற்படுகிறது.

இந்த சாலையானது விருத்தாசலம் - பரங்கிப்பேட்டை சாலையின் இணைப்பு சாலையாக இருப்பதால் அத்தியாவசிய தேவைகளுக்கு

6 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சேத்தியாத்தோப்பு பகுதிக்கு வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே கிடப்பில்போடப்பட்டஇந்த சாலையை விரைவில் தரமான தார் சாலையாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மூன்று கிராம மக்களும் வைத்துள்ளனர்.

Related Stories: