உடன்குடியில் அதிமுக ஆலோசனை கூட்டம்

உடன்குடி, மார்ச் 22: உடன்குடி நகர அதிமுக அலுவலகத்தில், உடன்குடி ஒன்றிய, நகர நிர்வாகிகளுடன் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் முருங்கை மகாராஜா தலைமை வகித்தார். நகர செயலாளர் ஜெயகண்ணன்  முன்னிலை வகித்தார். தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் எம்எல்ஏ கலந்து கொண்டு பேசுகையில்,  வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நமது கூட்டணி கட்சியான பாஜவுக்கு தூத்துக்குடி  ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளரை வெற்றி  பெறச்செய்வது கடமையாகும். ஒவ்வொரு தொண்டனும் கூட்டணி கட்சி  நிர்வாகிகளுடன் கலந்து வீடு, வீடாகச் சென்று தேர் தல் பிரசாரம் செய்து  அதிக வாக்குகள் சேகரிக்க வேண்டும், என்றார்.

முன்னதாக பாஜ மாவட்ட  செயலாளர் சிவமுருகஆதித்தன், ஒன்றிய தலைவர் திருநாகரன், நகர தலைவர்  ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் சண்முகநாதனை சந்தித்து தேர்தல் சம்பந்தமாக  ஆலோசனை நடத்தினர். இதில் அதிமுக தலைமை பேச்சாளர் பொன்ராம், மாநில  பொதுக்குழு உறுப்பினர் ஆயிஷாகல்லாசி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர்  மூர்த்தி, ஒன்றிய ஜெ. பேரவை செயலாளர் சாரதி, திருச்செந்தூர் ஒன்றிய  செயலாளர் ராமச்சந்திரன், உடன்குடி யூனியன் முன்னாள் சேர்மன் மல்லிகா,  துணை சேர்மன் ராஜதுரை, ஊராட்சி செயலாளர்கள் குலசை சங்கரலிங்கம்,  ராஜ்குமார், அமிர்தாமகேந்திரன், தாவீது, மகேந்திரன் மற்றும் சக்திவேல்,  ரெங்கன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: