கந்தர்வகோட்டையில் கல்விச்சீர், அறிவியல் தினவிழா

கந்தர்வகோட்டை, மார்ச் 7: கந்தர்வகோட்டை அருகே அரியாணிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கல்விச்சீர் மற்றும் அறிவியல் தினவிழா நடைபெற்றது. விழாவில் ஊர் பொதுமக்கள் வழங்கிய கல்விசீர் பொருட்களை பள்ளி தலைமையாசிரியை வளர்மதி பெற்றுக் கொண்டார். கல்விச்சீரையும், அறிவியல் கண்காட்சியையும் வட்டார கல்வி அலுவலர்கள் அலெக்சாண்டர், வெங்கடாசலம், வட்டார கல்வி மேற்பார்வையாளர் சுரேஷ் உள்ளிட்ட பலர் பாராட்டினர். மாணவர்கள் தாங்கள் தயாரித்த படைப்புகளை அனைவருக்கும் விளக்கி கூறினர். சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள் கோகில வைரக்கண்ணு, வெங்கட்சுப்ரமணியன், நாராயணசாமி, கிருஷ்ணவேணி, கனிமொழி மற்றும் மாணவர்களின் பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: