தனியார் வங்கி ஊழியர் ரயிலில் அடிபட்டு பலி

தூத்துக்குடி, பிப்.21: தூத்துக்குடியில் ரயிலில் அடிபட்டு தனியார் வங்கி ஊழியர் பலியானார். தூத்துக்குடி 4ம் ரயில்வே கேட் - மீளவிட்டான் இருப்புபாதை பகுதியில் தண்டவாளத்தில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்ஐ முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertising
Advertising

விசாரணையில் அவர் பிரையன்ட் நகரைச் சேர்ந்த அரவிந்த்குமார் (25) என்பதும் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் தற்காலிக அலுவலராக இருந்ததும் தெரியவந்தது.

மேலும் அவர் அங்கு தண்டவாளத்தை கடக்க முயன்றதால் ரயிலில் அடிபட்டு பலியானாரா அல்லது ரயில் இருந்து தவறி விழுந்து பலியானாரா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: