தூத்துக்குடி, திருச்செந்தூர், சாத்தான்குளத்தில் 3ம் நாளாக பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஸ்டிரைக்

தூத்துக்குடி, பிப். 21: தூத்துக்குடி, திருச்செந்தூரில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் நேற்று 3வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. சேவை மையங்கள் மூடப்பட்டன. பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 15 சதவீத ஊதிய நிர்ணய பலனுடன் 3வது ஊதிய மாற்றத்தை அமல்படுத்தவேண்டும், பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தை துவங்கினர். தூத்துக்குடி, திருச்செந்தூரில் 3வது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது. போராட்டம் காரணமாக பி.எஸ்.என்.எல். சேவை மையங்கள் மூடப்பட்டன. தொலைபேசி அலுவலகங்களில் பணியாளர்கள் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் தொலைபேசி பழுது நீக்குதல், பில் கட்டணம் செலுத்துதல், இணையதள சேவை உள்ளிட்ட பணிகள் முடங்கின. தூத்துக்குடியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜீவானந்தம், சுப்பையா, பர்னபாஸ், சித்திக், பால்சாமி, அம்பிகாவதி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றடனர்.

திருச்செந்தூர்: திருச்செந்தூர் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது. சந்திரசேகரன் ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி பேசினார். இதில் சுப்பையா, சுப்பிரமணியன், மகேஸ்வரன், ஸ்ரீராகவன், நெல்லையப்பன், வெள்ளப்பாண்டி, காளிமுத்து, பாலன், ரெஜிபாலன், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முருகேசன் நன்றி கூறினார். சாத்தான்குளம்:சாத்தான்குளம் பகுதியில் செல்போன் சேவை வழக்கம் போல் செயல்பட்டது. ஆனால் பி.எஸ்.என்.எல் இணையதளசேவை நேற்று காலை முதல் செயல்படவில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் தகவல் தொடர்பை பயன்படுத்திட முடியாமல் சிரமத்துள்ளாகினர். சிலர் பிற நெட்வொர்க் சேவையை இரவல் வாங்கி பயன்படுத்தினர். சாத்தான்குளம் பகுதியில் பி.எஸ்.என்.எல் இணையதள சேவையை நிறுத்தம் செய்யாமல் தொடர வேண்டும் என வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: