குலசேகரன்பட்டினத்தில் மாவட்ட கிரிக்கெட் போட்டி உடன்குடி அணி முதலிடம்

உடன்குடி, பிப். 20:  குலசேகரன்பட்டினத்தில் நடந்த மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் உடன்குடி அணி முதலிடம் வென்றது.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு குலசேகரன்பட்டினம் ஹசனியா  நடுநிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில்  உடன்குடியில் மாவட்ட அளவில் 32 அணிகள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி 4 நாட்கள் நடந்தது.

   இறுதிப்போட்டியில் முதலிடம் வென்ற உடன்குடி ராக்கர்ஸ் அணிக்கு வெற்றி கோப்பை,  ரூ.10ஆயிரம், 2ம் இடம் பிடித்த உடன்குடி அசார் அணிக்கு வெற்றிகோப்பை, ரூ.7ஆயிரம், 3ம் இடம் பிடித்த குலசை அசனியா பள்ளி அணிக்கு வெற்றிக்கோப்பை, ரூ.5ஆயிரம், 4ம் இடம் பிடித்த உடன்குடி கொட்டங்காடு அணிக்கு ரூ.3ஆயிரம் வீதம் பரிசுகள் வழங்கப்பட்டன.

   பரிசளிப்பு விழாவிற்கு சிறுபான்மை நல உரிமைப்பிரிவு மாவட்ட  துணை அமைப்பாளர் சிராசுதீன் தலைமை வகித்தார்.

வர்த்தக அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் ரவிராஜா, உடன்குடி நகரச் செயலாளர் ஜாண்பாஸ்கர், சிவலூர் ராஜேந்திரன், முகைதீன், கிஷார் சாகுல் ஹமீது  முன்னிலை வகித்தனர். ஒன்றியச் செயலாளர் பாலசிங், சிறுபான்மை நல உரிமைப்பிரிவு மாவட்ட அமைப்பாளர் ராஜேஷ்  பரிசுகள்  வழங்கினர்.  ஏற்பாடுகளை பழைய மாணவர் சங்கத் தலைவர் அபுல்காசிம், செயலாளர் அசாரூதீன், துணைச் செயலாளர் ரம்சான் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Related Stories: