தூத்துக்குடி அருகே பராமரிப்பின்றி பாழானது சுவர் இடிந்துவிழுந்த வாறுகாலால் தொடரும் விபத்து அபாயம்

ஸ்பிக்ந்கர், பிப். 15: தூத்துக்குடி ஸ்பிக்நகர் அடுத்த சுந்தர்நகரில் சுவர் இடிந்து விழுந்த நிலையில் உள்ள வாறுகாலால் விபத்து அபாயம் நிலவுகிறதுa. விரைவில் சீரமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் உள்ளனர்.

  தூத்துக்குடி ஸ்பிக்நகர் அடுத்த சுந்தர்நகர் பகுதியில் அமைந்துள்ள சாலை வழியாக புதுக்கோட்டை, அத்திமரப்பட்டி, பாரதிநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தூத்துக்குடி சென்று வருகின்றனர்.
Advertising
Advertising

ஸ்பிக்நகர் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் சுந்தர்நகர் வழியாக தான் செல்கின்றனர். இப்பகுதியில் வணிக நிருவனங்கள் அதிக அளவில் காணப்படுவதால் நாள் முழுவதும் மக்கள் போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். இதனிடையே இச்சாலையின் அருகே பராமரிப்பின்றி பாழாகி வந்த வாறுகாலின் தடுப்புசுவர் திடீரென இடிந்து விழுந்துள்ளது. ஆனால், இன்னும் சீரமைக்கப்படாததால் அதை கடந்துசெல்லும் பள்ளிக்குழந்தைகளும், பொதுமக்களும் விபத்துக்கு உள்ளாகும் அபாயம் நிலவுகிறது. எனவே, இனியாவது சம்பந்தப்பட்டஅதிகாரிகள் இதுவிஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி  கால்வாயை விரைவில் கால்வாயை சீரமைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா? என்ற எதிர்பார்ப்புடன் அப்பகுதி மக்கள் உள்ளனர்.

Related Stories: