பேய்க்குளத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

சாத்தான்குளம், பிப். 15: சாத்தான்குளம், பேய்க்குளம் பகுதியில் தற்போது நெல் அறுவடை பணி நடந்து வருவதால் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் வலியுறுத்தினர். இதையடுத்து சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளம் விராக்குளம் செல்லும் சாலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இதையொட்டி நடந்த விழாவிற்கு தலைமை வகித்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் நடேசன், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார். தரக்கட்டுப்பாடு அதிகாரி முத்துபாண்டி வரவேற்றார். கொள்முதல் நிலையத்தில் நெல் ஒரு கிலோ ரூ 18.40 வாங்கப்படுகிறது. ஒரு மூடைக்கு ரூ1840 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில்  விவசாயிகள் ஆர்வமுடன் நெல்கொள்முதல் செய்தனர். கடந்த ஆண்டு கிலோ ரூ16.40க்கும், 100 கிலோ மூடை ரூ.1640க்கும் கொள்முதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. விவசாயிகள் இந்த கொள்முதல் நிலையத்தை பயன்படுத்தி அதிகளவு நெல் கொள்முதல் செய்து பயனடைய வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  விழாவில் திருச்செந்தூர் பகுதி அலுவலர் கணேசன், கொள்முதல் அலுவலர் கார்த்திக் நாராயணன், ஆழ்வார்திருநகரி வேளாண் அலுவலர் முத்துமாரி. மற்றும் விவசாயிகள் சங்கத் தலைவர் முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த ஆண்டு மூடைக்கு ரூ.200 அதிகரித்து நெல் கொள்முதல் செய்யப்படுவது மகிழ்ச்சி தருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Related Stories: